மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு
மும்பை,
மராட்டிய மாநில துணை முதல் மந்திரியாக இருந்து வந்தவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந் தேதி விமான விபத்தில் பலியானார். இதைத்தொடர்ந்து, பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக, அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. சுனேத்ரா பவார் நேற்று மாலை 5 மணிக்கு துணை முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு கலால் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
