78ஆவது சுந்திர தினம்: தென்னிலங்கையில் இன்று கோலாகல கொண்டாட்டம்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தைத் தென்னிலங்கையில் இன்று கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதான நிகழ்வு இன்று காலை 7.45 மணி முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. இது தவிர, பல்வேறு பகுதிகளிலும் சுதந்திர தின சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று, நாடு முழுவதும் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களிலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், சுதந்திர தினத்தையொட்டி தென்னிலங்கையில் தேசிய கொடி விற்பனையும் அதிகளவில் காணப்படுகின்றது. எனினும், தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் அவ்வாறான நிலைமை இல்லை.
1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஒல்லாந்தர், பிரித்தானியர் என்று சுமார் 450 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரமடைந்தது.
