புங்குடுதீவில் கூரிய ஆயுதங்களுடன் இரண்டு இளைஞர்கள் சிக்கினார்கள்.
யாழ். புங்குடுதீவில் கூரிய ஆயுதங்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவில் வன்முறைக் கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது என்று அப்பகுதி மக்களால் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் பொலிஸார், புங்குடுதீவு பகுதியில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, கூரிய ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவருடன் அவர்களின் உடைமையில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா கோடரி என்பவற்றைப் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட இருவருடனும் சேர்ந்து இயங்கிய சிலரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
