மேலும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – நாடாளுமன்றம் அங்கீகாரம்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் தீர்மானம் சபையில் நேற்று மாலை 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது
இதற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.
அதன்படி, சபையில் நேற்று மாலை ஆளும் தரப்பு வரிசையில் அமர்ந்திருந்த 106 உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எதிரணி வரிசையில் அமர்ந்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
