மக்களின் நம்பிக்கையை வெல்வதே எமது இலக்கு! குறுகிய காலத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்கள்; எதிரணி புலம்புகின்றது என காட்டம்.

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்த விமர்சனங்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனக் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“பிரசன்ன ரணதுங்க கூறுவது போல் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படவில்லை. கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்த ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாகத்தை மாற்றி, ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதையே எமது அமைச்சர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க போன்ற எதிரணியினர், மக்கள் வழங்கிய புதிய அரசியல் ஆணையைச் சகித்துக் கொள்ள முடியாமல் இவ்வாறான விரக்தி கலந்த கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அமைச்சரவை மிகவும் அர்ப்பணிப்புடன், மிகக் குறுகிய காலத்துக்குள் பல ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்துள்ளது.

அமைச்சர்களின் செயற்றிறன் இன்மையால் அரசு வீழ்ச்சியடையும் என்பது எதிரணியினரின் வெறும் பகற்கனவு மாத்திரமே. மக்களின் நம்பிக்கையை மென்மேலும் வென்றெடுக்கும் வகையில் எமது திட்டங்களை நாங்கள் உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.