யாழ். பல்கலையின் 40 ஆவது பட்டமளிப்பு விழா: இன்று வெகுவிமரிசையாக 3 ஆம் நாள் அமர்வுகள்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றன.
கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் பட்டமளிப்பு விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு நாள்களாக நடைபெறுகின்றது.
மொத்தம் 12 அமர்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3 அயிரத்து 252 மாணவர்கள் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேலின் தலைமையில் இந்த அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படுகின்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




