மத்திய கிழக்கு பதற்றம்: விமான சேவைகள் இரத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இன்று அங்கு இயக்கப்படவிருந்த 12 விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இரத்துச் செய்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய வான்பரப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இரத்துச் செய்யப்பட்டுள்ள விமானங்களின் விவரங்கள் பின்வருமாறு:-
* கொழும்பு – டுபாய்: UL 231 / UL 225
* டுபாய் – கொழும்பு: UL 232 / UL 226
* கொழும்பு – தோஹா: UL 217
* தோஹா – கொழும்பு: UL 218
* கொழும்பு – டம்மாம்: UL 253
* டம்மாம் – கொழும்பு: UL 254
* கொழும்பு – ரியாத்: UL 265
* ரியாத் – கொழும்பு: UL 266
* கொழும்பு – குவைத்: UL 229
* குவைத் – கொழும்பு: UL 230
இதேவேளை மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், மேலதிக தகவல்களுக்கு அந்தந்த பயண முகவர்கள் அல்லது விமான நிறுவனத்தின் இணையத்தளத்தைத் தொடர்புகொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
