தேர்தலுக்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பிலும் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஏனைய ஆலோசனைகளும் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

நாளை நள்ளிரவு வௌியாகவுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் COVID-19 தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக இடைவௌியை பேணுவதுடன், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.