ஹெலிகொப்டர் விபத்து! 6 படையினர் உயிரிழப்பு!!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 படையினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகொப்டர், மாதுரு ஓயா இராணுவ விசேட படைத்தளத்தில் இருந்து விசேட படைப்பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஒரு விளக்கப் பயிற்சியைக் காண்பிக்க விசேட படையினருடன் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின்போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட 12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அரலகங்வில அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலனறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விமானப்படைத் தளபதி தலைமையிலான 9 பேர் கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.