திமுக மாநாட்டுக்குச் சென்றபோது சோகம்: தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

திமுக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திருச்சியில் இன்று திமுக-வின் 12வது மாநில மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவார் என கூறப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வருகை புரிகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க வேனில் சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலை அருகே செல்லும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயமடைந்தனர், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.