புலம்பெயர் தொழிலாளர் குடும்ப நலனுக்காக கடந்த இரு மாதங்களில் 9 கோடி ரூபா செலவு – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல்.

நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரிச் செயற்பாடுகளுக்காக 9 கோடி 62 இலட்சம் ரூபா (96.2 மில்லியன் ரூபா) செலவிடப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அப்பணியகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாத காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 5 ஆயிரத்து 938 பயனாளிகளுக்காக இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்துக்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பங்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பணியகத்தால் மேலும் பல விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.