லெமன் ஜூஸுக்கும் கேஸ் சார்ஜா? பெங்களூரு உணவகத்தின் வினோத கட்டணத்தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் லெமன் ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளருக்கு ‘கேஸ் சார்ஜ்’ என்ற பெயரில் கூடுதலாக ரூ.17 வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் லெமன் ஜூஸ் வாங்கிய பில்லில், பானத்தின் விலையுடன் ‘கேஸ் சார்ஜ்’ என தனியாக ரூ.17 சேர்க்கப்பட்டிருந்தது. இந்த பில்லின் புகைப்படம் இணையத்தில் வைரலானநிலையில், நெட்டிசன்கள் பலரும் கமென்ட்டுகளில் கலாய்த்து வருகின்றனர்.

“குடிச்சது ஜூஸு… அதுக்கு எதுக்குங்கண்ணா கேஸு?” என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, இது போல கேஸ் பயன்பாடு இல்லாத உணவுகளுக்கு இந்த தொகை சேர்க்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் தள்ளுபடி என்ற பெயரில் அதே தொகையை கழித்துவிடுவதாக தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.