இன்று இரவு ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு விசேட உரை – நெருக்கடி காலத் திட்டங்கள் குறித்து அறிவிப்பு.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இந்தத் தகவலை இன்று உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

எதிர்பார்ப்பு

மத்திய கிழக்கு போர்ச் சூழல், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை அறிவிப்பு போன்ற நெருக்கடியான தீர்மானங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் இந்த உரை அமையவுள்ளது. தற்போதைய சவால்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்த மேலதிக விளக்கங்களை ஜனாதிபதி இதன்போது வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை
நாடாளுமன்றில் உரை

அதேநேரம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் அங்கு விரிவாக உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.