அதிபரில்லாமல் இயங்கும் வேதாரணியேஸ்வர வித்தி. – பெற்றோர் கடும் எதிர்ப்பு.

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாய் வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தில் நீண்ட நாள்களாக அதிபர் நியமனம் வழங்கப்படாமைக்கு, அங்கு கல்வி கற்றும் மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அண்ணளவாக 150 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையின் முன்னாள் அதிபர், கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 8ஆம் திகதி மாற்றலாகிச் சென்றார். இதையடுத்து, இன்று வரை பதில் நியமனம் வழங்கப்படவில்லை. தற்போது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரே பதில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.

இதையடுத்தே, புதிய அதிபரை உடனடியாக நியமிக்குமாறு வலியுறுத்தி பெற்றோர் நேற்று கையொப்பச் சேகரிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பிவைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.