பிபில – மகியங்கனை வீதியில் கோர விபத்து முதியவர் மரணம்; வாகனங்கள், கடை சேதம்.

பிபில – மகியங்கனை வீதியின் ஏகே கட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய கோர விபத்தில், 65 வயதுடைய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகியங்கனை திசையிலிருந்து வந்த கார், பிபில திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனத்தையும் (ஓட்டோ) சுமார் 10 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று, அங்கிருந்த சிறிய கடையொன்றின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தால் வீதியோரத்தில் இருந்த பழக்கடையொன்று பலத்த சேதமடைந்ததுடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழங்கள் அனைத்தும் வீதியெங்கும் சிதறிக் காணப்பட்டன.

மோட்டார் சைக்கிளின் சாரதியான 65 வயதுடைய முதியவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.