மனநலம் பாதிக்கப்பட்ட நபர் காட்டு யானை தாக்கி மரணம்!

மொனராகலை மாவட்டம், தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாஓய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில், மனநலம் பாதிக்கப்பட்ட 36 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் எதிலிவெவ பகுதியில் தங்கியிருந்த மேற்படி நபர் மீது காட்டு யானை திடீரெனத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எதிலிவெவ பகுதியில் வசித்து வந்த 36 வயதுடைய, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யானைத் தாக்குதல்கள் இப்பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.