கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்ற உயர்தர வகுப்பு மாணவன் விபத்தில் பலி! – கண்டியில் சோகம்.
கண்டியில் இன்று பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியைப் பார்ப்பதற்காக இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது எதிரே வந்த பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய மாணவன் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
உயிரிழந்த மாணவன் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சோகமான சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
