’20’ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு!

’20’ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு மலையக மக்கள் முன்னணி வழங்கியிருந்த காலக்கெடு இன்றுடன்  (13.11.2020) நிறைவடைந்துள்ளது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அரசின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பாக மலையக மக்கள் முன்னணி அவரிடம் விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு செயற்குழு கூடி இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததை அடுத்து இந்தக் கூட்டத்தில் ஏகமனதாக அவரிடம் கடிதம் மூலம் விளக்கம் கோருவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி அவருக்கு விளக்கம் அளிப்பதற்கு 14 வேலை நாட்கள் அடங்கிய நாட்களில் அவர் விளக்கமளிக்க வேண்டும் எனவும், அவருக்கு இது தொடர்பாக கடிதம் மூலம் அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ். விஜயச்சந்திரன் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு அனுப்பி வைத்தார்.

இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியின் கருத்துக்கு மாறாக வாக்களித்தமை தொடர்பாக விளக்கம் தருமாறு கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தின் காலக்கெடு இன்றுடன் (13.11.2020) நிறைவடைந்துள்ளது.

இது தொடர்பாக அவர் தனது விளக்கக் கடிதத்தை மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அந்தக்  கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கான பதிலை அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைப்பார் என விஜயச்சந்திரன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

கடிதம் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடித் தீர்மானம் எடுப்பார்கள் எனவும் விஐயசந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அரவிந்தகுமாரின் விளக்கம் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.