புடவைக்கடை வியாபார உரிமையாளரின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளை.

யாழ்ப்பாணம் நகரில் புடவை நிலையம் நடத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து மனைவியுடன் வீடு திரும்பிய சமயம் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம் ரூபா பணமும் 12 பவுண் தாலிக்கொடியும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

யாழ். நகரின் மத்தியில் இரு புடவையகங்களை நடத்தும் சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் வர்த்தகர் தீபாவளி விற்பனையில் ஈடுபட்டு 12ம் திகதி (வியாழக்கிழமை) இரவு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இதன்போது வீட்டிற்கு அண்மையில் 3 மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஐவர் திடீரென பாய்ந்து வர்த்தகரின் மனைவியை இழுத்து மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியதோடு கணவனின் கையில் இருந்த பையையும் பறித்தெடுத்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையர்கள் பறித்த பையில் விற்பனைப் பணம் 6 லட்சம் ரூபா இருந்ததாம். அதேநேரம் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுண் தாலிக்கொடி மற்றும் சங்கிலியையும் அறுத்துக் கொண்டு அவர்கள் ஓடியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட இழுபறியில் கழுத்தில் இருந்த சங்கிலி
மட்டும் அறுந்து வீழ்ந்தமையினால் அது தப்பியது.

இது தொடர்பில் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிசார் மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

 

Leave A Reply

Your email address will not be published.