அரசாங்க நிதியை சூறையாடிய உள்ளூராட்சி புள்ளிகள் – பகிரங்கப்படுத்திய நளின் த ஜயதிஸ்ஸ

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டக் காலத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் வீடுகள் சேதமடைந்ததற்காக 92 முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு 620.6 மில்லியன் ரூபாயை (சுமார் 1.7 மில்லியன் யூரோக்கள்) இழப்பீடாக வழங்கியுள்ளதாக அமைச்சர் நாலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வெளியாகிய முக்கிய பெயர்கள் (சிலரது பெறுமதியுடன்):
லட்ச்மன் பெரேரா – ரூ. 698.7 லட்சம்

ஹேமந்த ஜாலிய – ரூ. 627.9 லட்சம்

இந்துனில் ஜகத் குமார – ரூ. 450.6 லட்சம்

நந்தனிய லாலினி கலும் – ரூ. 392 லட்சம்

எம்.ஆர். குமார (ஹம்பாந்தோட்ட) – ரூ. 352 லட்சம்

இதேபோன்று பல முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பல லட்சங்களை பெற்றுள்ளனர்.

இவர்கள் பொது நிதியில் இருந்து இவ்வாறு பெருந்தொகையை பெற்றுள்ளனர். மேலும் சிலர் அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு பெற்றதோடு, காப்பீடு மூலமும் பணம் பெற்றுள்ளனர் என்றும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசாங்கத்தின் நிதியை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதற்கான உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.