ஜனாதிபதியின் கட்சி மாணவர் சங்கங்களை நிறுத்தினால் “பகிடிவதை” இருக்காது! – நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதியின் கட்சியின் மாணவர் சங்கங்கள் மூலம் நடைபெறும் “பகிடிவதை”யை நிறுத்தினால் கல்வியை மேம்படுத்த முடியும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று பல்கலைக்கழகங்களில் “பகிடிவதை”க்கு தலைமை தாங்குவது ஜனாதிபதியின் தலைமையின் கீழ் செயல்படும் மாணவர் சங்கங்களே என்றும் அவர் கூறினார்.
எனவே அந்த மாணவர் சங்கங்களை செயலிழக்கச் செய்தால் பல்கலைக்கழகங்களில் “Ragging” சம்பவங்களை நிறுத்த முடியும் என்றும் அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.