மெதமுலனவில் எஸ்.ரி.எவ். திடீர் சோதனை: உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ரி – கட்டஸ்’ ரக துப்பாக்கி மற்றும் இரண்டு ரி – 56 ரகத் தோட்டாக்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமுலன பகுதியில் அமைந்துள்ள சந்தேகநபரின் இல்லம் நேற்று திங்கட்கிழமை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த உள்நாட்டுத் தயாரிப்புத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, மெதமுலன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.