திடீரெனக் கழன்ற ஓட்டோ சக்கரம்; லொறியுடன் மோதி சாரதி மரணம்.
ஹோரண – பாதுக்கை பிரதான வீதியின் ஜயந்தி மாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டோ, ஹோரணப் பகுதியிலிருந்து பாதுக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அதன் பின்னாலுள்ள சக்கரம் ஒன்று திடீரெனக் கழன்றுள்ளது. இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ, எதிரே வந்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதி உடனடியாகப் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் ஹத்தரலியத்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
