சத்யஜித் ரேயின் ஆஸ்த்தான நடிகர் சௌமித்திர சாட்டர்ஜி காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சௌமித்திர சாட்டர்ஜி இன்று காலமானார் அவர் இறக்கும் போது 85 வயது.

Soumitra Chatterjee, the Bengali legend you probably haven't heard of but  should

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகர் சௌமித்திர சாட்டர்ஜி(வயது 85), சத்யஜித் ரே உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Soumitra Chatterjee dead: Legendary actor Soumitra Chatterjee passes away at 85

சௌமித்திர சாட்டர்ஜி (Soumitra Chatterjee) அல்லது சௌமித்திர சட்டோபாத்யாய் (வங்காள: সৌমিত্র চট্টোপাধ্যায়, சனவரி 19, 1935 — நவம்பர் 15, 2020) இந்தியாவின் புகழ்பெற்ற வங்காள மொழி நடிகர் ஆவார். வங்காளத் திரைப்படத்துறையின் மிகப்பெரும் இயக்குனராக விளங்கிய சத்தியஜித் ரேயின் திரைப்படங்களில் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளார். வங்காளத் திரைப்படத்துறையின் மக்கள் கலைஞராக விளங்கிய உத்தம் குமாருடன் அடிக்கடி ஒப்பிடப்படுவதாலும் நன்கு அறிமுகமானவர். இந்தியத் திரைப்படத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகெப் பால்கே விருதுக்கு 2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.

20 Soumitra Chatterjee Films That Every Indian Should Watch | HuffPost India Entertainment

சௌமித்திர சாட்டர்ஜி மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கிருஷ்ணநகரில் 1935ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இளமைக் காலத்திலேயே சௌமித்திர சாட்டர்ஜியின் குடும்பம் கொல்கத்தா மற்றும் ஹௌராவிற்கு குடிபெயர்ந்தது. வங்காள இலக்கியத்தில் சௌமித்திர சாட்டர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சிறப்புகளுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழக்கத்தில் வங்காள இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பும் மேற்கொண்டார். கொல்கத்தாவில் சத்தியஜித் ரேயின் பழைய அடுக்ககம் ஒன்றில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்னால் இவர் அனைத்திந்திய வானொலியில் பணியாற்றி உள்ளார்.

Being Soumitra Chatterjee | Entertainment News,The Indian Express

சௌமித்திர சாட்டர்ஜி சத்தியஜித் ரேயின் அப்பூர் சன்சார் (அப்புவின் உலகம்) என்றத் திரைப்படத்தில் 1959ஆம் ஆண்டில் அறிமுகமானார். இதன்பிறகு ரேயுடன் பதினான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடன் சர்மிளா தாகூரும் பல ரே திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Soumitra Chatterjee no more | The Daily Star

இவரைப் பல வேடங்களில் நடிக்க வைத்துள்ள ரே சில வேடங்களும் திரைக்கதையும் இவரை மனதில் இருத்தியே உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. சத்தியஜித் ரேயின் ஃபெலுடா தொடர் நூல்களிலும் 1970களின் சோனார் கெல்லா, ஜோய் பாபா ஃபெலுநாத் என்ற இருத் திரைப்படங்களிலும் தனிநபர் துப்பறிவாளராக வரும் ஃபெலுடா என்ற பிரதோஷ் சந்திர மிடர் வேடத்தில் நடித்துள்ளார். கரே பாய்ரே என்ற ரவீந்திர நாத் தாகூரின் புதினத்தை திரைப்படவடிவில் எடுத்தபோது அதில் முதன்மை வேடத்தில் நடித்தார். சாக்கா பிரசாக்கா என்றத் திரைப்படத்தில் மனதை உருக்கும் விதத்தில் நடித்துள்ளார்.

சத்தியஜித் ரே தவிர மிருணாள் சென் ,தபன் சின்கா ஆகிய முன்னணி வங்காளத் திரைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Actor Soumitra Chatterjee undergoes first plasmapheresis; has fever but stable - india news - Hindustan Times

சௌமித்திர சாட்டர்ஜி பெற்ற சில முதன்மையான விருதுகள்:

பிரான்சிய அரசின் உயரிய கலை விருதான ஆபிசியர் தெஸ் ஆர்ட்ஸ் எ மெட்டியர்ஸ் (Officier des Arts et Metiers)
இத்தாலியின் வாழ்நாள் சாதனையாளர் விருது
பத்மசிறீ விருது வழங்கப்பட்டது – ஆனால் சாட்டர்ஜியால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை
பத்ம பூசன் – 2004 இல்
தேசியத்திரைப்பட விருதுகள் – சிறந்த நடிகர் விருது 2007 இல்
தாதாசாகெப் பால்கே விருது – 2011 (2012இல் அறிவிக்கப்பட்டது)

Leave A Reply

Your email address will not be published.