ஹெரோயின் வழக்கில் காதலன் சிறையில்! ஐஸ் போதைப்பொருளுடன் காதலி கைது!!

கம்பஹா, மீரிகமை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி யுவதியின் 26 வயதுடைய காதலன், அண்மையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.