மறைந்த ஜனாதிபதி பிரேமதாஸவின் 33 ஆவது நினைவு தின தர்ம போதனை.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் 33 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் இன்று வியாழக்கிழமை மாலை விசேட தர்ம போதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஹுணுபிட்டி கங்காராம விகாரையின் பிரதம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாயக தேரரின் அழைப்பின் பேரில், சங்கைக்குரிய தந்திரிமலை சரண தேரர் தர்ம போதனையை நிகழ்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரது தாயார் ஹேமா பிரேமதாஸ மற்றும் பாரியார் ஜலனி பிரேமதாஸ உள்ளிட்ட ரணசிங்க பிரேமதாஸவின் குடும்பத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த ஜனாதிபதிக்குத் தர்ம வழியில் ஆசி வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.