எயார்பஸ் முறைகேடு விவகாரம்: மஹிந்தவுக்கு அழைப்பாணை.
எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் நடைமுறையில் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன என்று முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான மேலதிக புலன்விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன எனவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
