துண்டிக்கப்பட்ட மனிதத் தலை மீட்பு! – அளுத்கம கடற்கரையில் கொடூரம்.

களுத்துறை, அளுத்கம – மொரகல்ல கடற்கரையில் அமைந்துள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரைப் பகுதியில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

அளுத்கம பொலிஸாருக்குக் கிடைத்த அவசர தொலைபேசித் தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், முன்னெடுத்த முதற்கட்ட விசாரணைகளின் போதே இந்த மனிதத் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தலை ஒரு ஆணினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது ஒரு திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அளுத்கம பொலிஸார், தடயவியல் அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.