காணி விடுவிப்புத் தொடர்பில் யாழ். அரச அதிகாரிகளால் போதிய அழுத்தம் இல்லை!

இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிகாரிகள் போதிய அழுத்தத்தை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்புத் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரச அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டன. எனினும், இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான வலுவான அழுத்தத்தை யாழ்ப்பாணம் மாவட்ட அதிகாரிகள் வழங்கவில்லை. இராணுவத்தினர் கூறுவதைக் கேட்கும் நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி விடுவிப்பு நடவடிக்கை நேற்று வெற்றியளிக்காமைக்கு அரச அதிகாரிகளின் மந்தமான செயற்பாடே காரணம் என்று கூறப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் ஏனைய மாவட்டங்களின் அரச அதிகாரிகள் முழுமையான தரவுகளுடன் வலுவான கோரிக்கைகளை இராணுவத்திடம் முன்வைத்து தமக்கான தீர்வைப் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.