எரிபொருள் விலை உயர்வு தவிர்க்கவே முடியாததாம் – இப்படி அமைச்சர் விளக்கம்.

உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைவாக உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் எரிபொருள் விலையை அதிகரிக்காத பட்சத்தில், நாட்டின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனினும், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. வருங்காலத்தில் உலகச் சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் பட்சத்தில், அதன் முழுமையான பயனை தங்குதடையின்றி நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.