முப்பது வருட பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக மாணவி ஒருவர் சித்தி.

30 வருடங்களின் பின்னர் சாதனை.

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேற்றின் படி முப்பது வருட பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலையான கேணி நகர் மதீனா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய ஜே.எப்.றிஸ்கா எனும் மாணவி 160 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

1990 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலையில் இதுவரை எந்த மாணவர்களும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை என்று பாடசாலையின் அதிபர் ஏ. மீரா முகைதீன் தெரிவித்தார்.

அத்தோடு, குறித்த பாடசாலையில் இம்முறை 15 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அனைவரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டிய மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர் ஏ.எம்.சித்தீக் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், அத்துடன் ஒத்துழைப்புக்களை வழங்கிய கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் அதிபர் ஏ.மீரா முகைதீன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.