சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை 11 ஆயிரத்து 790 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தி – 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி.
https://wetransfer.com/downloads/a9ff894e29a15da4d3d981b066c18d4620260620035810/96c23bd97c89ddc8ca9876155004b50420260620035906/90ba11?utm_source=wt_sendgrid&utm_medium=email&utm_campaign=TRN_DL_WTP_01&trk=TRN_DL_WTP_01
2025ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகள் தொடர்பாக பத்தரமுல்லையில் உள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மட்டத்தில் கல்வித்துறையில் மிகப் பாரிய முன்னேற்றம் பதிவாகியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 11 ஆயிரத்து 790 பேர் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை மாணவர்களின் ஆகப்பாரிய சவாலாகக் கருதப்படும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
விஞ்ஞானத்தில் 70.1 சதவீத மாணவர்களும், கணிதத்தில் 72.03 சதவீத மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
