‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது!

கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதி கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் நீண்ட நாள்களாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, நேற்று அப்பகுதியில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதே, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இந்த யுவதியைச் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள யுவதியைப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவருக்குப் பின்னால் உள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.