தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கில் 9 மாணவர்கள் 195 புள்ளிகளுக்கு மேல்..

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்
வடக்கில் 9 மாணவர்கள்
195 புள்ளிகளுக்கு மேல்

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 9 மாணவர்கள் 195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா (198),  யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் (195), கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாவணவன் மதியழகன் மகிர்சன் (195), சென் ஜோன் பொஸ்கோ பாடசாலை மாணவி அன்ஜிதன் அஜினி (195), அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி சிவநாதன் லிவின்சிகா (195) ஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாலய மாணவி முரளிதரன் அஸ்விகன் (196), வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா (196), கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் இல.1 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் ரவீந்திரன் நிதுசன் (195), மன்னார் மாவட்டத்தில் சென்.சேவியர் பெண்கள் கல்லூரி  மாணவி ரவீந்திரன் றொசானா சைலின் (195) ஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் வடமாகாண கல்வி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.