தோல்வி கண்ட கோட்டா ‘பட்ஜட்’ சஜித் அணி எம்.பி. ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு.

தோல்வி கண்ட கோட்டா ‘பட்ஜட்’
சஜித் அணி எம்.பி. ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்வைத்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது முற்று முழுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு – செலவுத் திட்டமாகவே நாம் கருதுகின்றோம். தோல்வி கண்டுள்ள வரவு – செலவு திட்டத்தையே அரசு முன்வைத்துள்ளது.”

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் புதுமையான, புதிய சிந்தனைகளைக் கொண்ட வரவு – செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறான எந்தவொரு அவசியமான காரணிகளும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான மோசமானதொரு வரவு – செலவு திட்டத்தை அரசு முன்வைத்ததை எண்ணி நாம் கவலைப்படுகின்றோம்.

நாட்டின் நம்பிக்கை இதன் மூலமாக வீழ்ச்சி கண்டுள்ளது என்றே கூறியாக வேண்டும், எனவே, இந்த வரவு – செலவுத் திட்டம் தோல்வி கண்டுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.