நூலிழப்பில் தப்பிய 3 இந்திய எண்ணெய் கப்பல்கள்: ஈரான் மூடுவதற்குள் ஹார்முஸ் நீரிணையை கடந்து சாதனை!

இந்தியக் கொடியுடன் பயணித்த Desh Vaibhav, Desh Vibhor, Sanmar Herald ஆகிய மூன்று பெரிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளன.

இவை மொத்தம் 8.6 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மற்றும் 94 இந்திய மாலுமிகளுடன் இந்தியாவை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றன.

Desh Vaibhav கப்பல் 286,572 மெட்ரிக் டன் எண்ணெயுடன் Vadinar Port-க்கு ஜூன் 24 அன்று வரவுள்ளது. Desh Vibhor கப்பல் 288,893 மெட்ரிக் டன் எண்ணெயுடன் Sikka Port-க்கு அதே நாளில் வரவுள்ளது.

மூன்றாவது கப்பல் Sanmar Herald, 285,400 மெட்ரிக் டன் எண்ணெயுடன் Paradip Port-க்கு ஜூலை 1 அன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, ஈரான் இராணுவம், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியதாக அறிவித்த சில மணிநேரங்களுக்கு முன் இந்த கப்பல்கள் நீரிணையை கடந்துள்ளன.

சனிக்கிழமை (ஜூன் 20) மாலை, அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறியதாலும், இஸ்ரேல் தெற்கு லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாலும், ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்தை கப்பல் போக்குவரத்தை தடை செய்துள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.