மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு: ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது! – 25 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணம் பறிமுதல்.

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று புதன்கிழமை இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 107 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரான்சிஸ்கு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரிடமிருந்து போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 25 இலட்சத்து 61 ஆயிரத்து 100 ரூபா ரொக்கப் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், பணம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மொரட்டுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.