இலங்கையின் முன்னேற்றத்துக்கு இன நல்லிணக்கம் மிக அவசியம்! – முன்னாள் அமைச்சர் பீரிஸ் வலியுறுத்து.

இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வரும் நிலையில், இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“எமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மிக அவசியமானது. நல்லிணக்கம் இல்லாத சூழலில் நாடு ஒருபோதும் முன்னேற்றத்தை அடையாது. எமக்கு இடையே நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொண்டு, ஒற்றுமையாகச் செயற்பட முன்வர வேண்டும்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.