ஹெரோயினுடன் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் – வாடகை வீட்டில் இருந்த வேளை கைது.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே, மேற்படி மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபராவார்.

இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.