2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்: நவம்பர் 12 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! – நிதி அமைச்சு அறிவிப்பு.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான கால அட்டவணையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம், ஒவ்வொரு அமைச்சுக்குமான முன்மொழியப்பட்ட செலவின ஒதுக்கீடுகளைக் கொண்ட சட்டமூலத்தின் வரைவு, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முக்கிய திகதிகள்

* செப்டெம்பர் 18: ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும்.
* ஒக்டோபர் 7: நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பு இடம்பெறும்.
* நவம்பர் 12: நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்படும்.
* நவம்பர் 13 முதல் 20 வரை: வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறும்.
* நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை: குழு நிலை விவாதங்கள் இடம்பெறும்.

நாட்டின் எதிர்வரும் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை உள்ளடக்கிய இந்த வரவு – செலவுத் திட்டத்தின் மீது அரசியல் மற்றும் பொதுத் தளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.