மீண்டும் அதிர்ச்சியளிக்கும் செம்மணிப் புதைகுழி! மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!!

https://we.tl/t-5SSGdU9uw5RTdirF

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி நேற்று ஆரம்பமாகியது. இதன்போது புதிதாக சிறு குழந்தைகள் இருவருடைய என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, மேலும் இரண்டு மனித என்பு எச்சங்கள் குவியல்களும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இருப்பினும், நேற்று புதிதாக மனித என்புத் தொகுதிகள் எதுவும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து, இதுவரை மொத்தமாக 414 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 409 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.