பஸ் – மோ. சைக்கிள் மோதி கோர விபத்து! அரச ஊழியர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!! – அம்பாறையில் சோகம்.
அம்பாறை மாவட்டம், மருதமுனை பிரதான வீதியில், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் கல்லடி, இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்தவர் என்பதுடன், தற்போது திருமண உறவின் காரணமாகப் பாண்டியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த பெரியநீலாவணை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

