தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு தொடங்கியது

இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.

இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குனர் சுந்தரேஷ் பாபு கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

இன்று சுயகணக்கெடுப்பு தொடங்குகிறது, https://se.census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம், இம்மாத இறுதி வரை 31ம் தேதி வரை நடைபெறும்.

சுயகணக்கெடுப்பு பதிவேற்றத்துக்கு பின்னர் ஒரு அடையாள எண் உருவாக்கப்படும், அதனை பொதுமக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும் இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.