ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் சிப்பாய்!
கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மகரை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் போதைப்பொருள் வைத்திருந்தார் என்று கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 120 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
