ஊடகவியலாளர்கள் மீது கைவைக்காதீர்கள் அரசிடம் சஜித் வேண்டுகோள்.

விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்; ஊடகவியலாளர்கள் மீது கைவைக்காதீர்கள்
அரசிடம் சஜித் வேண்டுகோள்

“சில விடயங்கள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக ஊடகவியலாளர்களும், சமூக ஊடகப்  பயனாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கடந்த சில நாட்களில் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இருக்குமாயின் ஊடகவியலாளர்கள் மீதும் கைவைக்க வேண்டாம் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் அரசமைப்பு கருத்துச் சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்துள்ளது.

நானும் ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளேன். ஆனால், என்னை விமர்சித்தவர்களைப்  பழிவாங்கியதில்லை.

செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில் தங்கள் கரிசனைகளை வெளியிடுபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்த அரசு விமர்சனங்களை ஏற்பதற்குப் பழக வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.