இந்த வருடம் இதுவரை 13 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பிலியந்தலை மற்றும் தெஹிவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் பதிவான மொத்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் காரணமாக இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.