முல்லையில் வறுமையிலும் சாதனை படைத்த சிறுமி குவியும் பாராட்டுக்கள்!

முல்லையில் வறுமையிலும் சாதனை படைத்த சிறுமி குவியும் பாராட்டுக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. முல்லைத்தீவு அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி.டிசானா  2020 தரம் -05 புலமைப்பரில் பரீட்சையில் 165 புள்ளிகளை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதியில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களும் மொத்தமாக ஆறு (06) மாணவர்களே கல்வி கற்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் கூட போதியளவு இல்லாமல் கிடைக்கப்பெற்ற வளங்களை வைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் இச் சாதனை நிலைநாட்டப்பட்டது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகின்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.