நிலாவெளி கடற்கரையில் நீராடிய நெதர்லாந்து சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவெளிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த மேற்படி சுற்றுலாப் பயணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலில் நீராடச் சென்றபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.