சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரைப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிரான மனுவின் மீது தீர்ப்பு 5 ஆம் திகதி! – புதிய உப தவிசாளர் தெரிவு அறிவிக்கப்பட்டபடி நாளை..

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையிலிருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநர் வௌியிட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் தீர்ப்பு வழங்குவது எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. எனினும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் வெற்றிடத்தை நிரப்ப உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கூட்டியுள்ள சபையின் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை.

அதனால் சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை நடைபெற்று புதிய உப தவிசாளர் நளையே பதவியேற்பார் எனத் தெரிகின்றது.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் நடத்தை தொடர்பில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை ஆளுநரால் வெறிதாக்கப்பட்டது.

இது தொடர்பான மாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு தடை கோரி முன்னாள் உப தவிசாளர் ஞா.கிஷோர் சார்பில் கடந்த 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட் மனு இன்றைய தினமும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தமது தரப்பு ஆட்சேபனையை மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் நீண்ட சமர்ப்பணமாக சபையிக் தொடர்ச்சியாக முன்வைத்தார்.

வாத இறுதியில் இந்த வழக்குக்கான தீர்ப்புக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாளையை தெரிவுக்கு இடைக்காலத் தடை ஏதும் நீதிமன்றம் பிறப்பிக்காத காரணத்தால் நாளை சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தேர்வு இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.