2026 தமிழ்நாடு பட்ஜெட்: 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் முதல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வரை – முக்கிய அறிவிப்புகள்!

2026 – 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாசித்து வருகிறார்.

2026 தமிழ்நாடு பட்ஜெட்
2026 – 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டை வாசித்து வரும் நிதி அமைச்சர் மரிய வில்சன், “வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும். முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி பாடத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு எற்படுத்த 10581 என்ற எண், பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதை செயல்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.277 கோடி மதிப்பீட்டில், 5.32 இலட்சம் 11ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஹெல்மெட் & வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.